Tuesday, November 10, 2015

சனி பிடித்தல்

சனி பிடித்தல் குறித்து கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?அது யாரையும் நேரடியாக இஷ்டப்படியெல்லாம் பிடிக்க முடியாதாம்

பிடிக்கவேண்டிய காலமானலும் கூடஆசார அனுஷ்டான பிசகை எதிர்பார்த்துஅப்படிப் பிசகிய இடம் மூலம்தான்
பிடிக்க வேண்டியவரைப் மிகச் சரியாகப்பிடிக்குமாம்

நீங்கள் கூட கேள்விப் பட்டிருக்கலாம் தன்புறங்காலைமிகச் சரியாக கழுவாத ராஜாவை அந்தமுழங்கால் மூலம் சனிபிடித்த  கதையை

எனக்கும் தங்களைப் போலவே இதிலெல்லாம்சுத்தமாக நம்பிக்கை இல்லை ஆனாலும்என் கண் முன்னால் நடந்த ஒரு விஷயம்
இதனை நம்பித் தொலைக்கும்படி செய்துவிட்டது

மதுரையில் எங்கள் வீடு அந்தக் காலனியில் பஸ் ஸ்டாப்பை ஒட்டி அமைந்திருந்ததுஎங்கள் வீட்டின் முன் அமைந்திருந்த வேம்பும்
நான் அடுத்தவர்கள் அமரட்டும் என வாசலில்போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சும் அந்தக் காலனியில் வெகு பிரசித்தம்

காலையில் கல்லூரி மற்றும் அலுவலகத்திற்குச்செல்லும் பெண்கள் எப்போதும் குறைந்ததுஅரை மணிநேரத்திற்குமுன்பாக வருவதும்
எங்கள் வீட்டு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துஹோம் ஒர்க் செய்வது
அல்லது அரட்டை அடிப்பதுஎன்பது எல்லோருக்கும்
பழகிப் போன ஒன்று

என் மனைவியும் எல்லோரிட்மும்அனுசரனையாக பேசுவதும்
நான் தேவையில்லாமல் பெரிய மனிதப் போர்வையில்
அவர்களது பேச்சில் கலந்து குழப்பாமலும் இருப்பதும்
அவர்களுக்கும் பிடித்துப் போனதால்எங்கள் வீட்டு வாசல் எப்போதும் கலகலப்பாய் இருக்கும்

என் மனைவிக்கு கல்லூரி   மற்றும் அலுவலகம்செல்கிற எல்லோரையும் தனிப்பட்ட முறையில்மிக நன்றாகத் தெரியும்
யார் யார் எந்த பஸ்ஸுக்குப் போவார்கள் யார் யார்இன்று விடுமுறை என்பதெல்லாம் கூடஎன் மனைவிக்கு அத்துப் படி
என் மனைவி மூலம் எனக்கும் அத்துப் படி

இப்படித்தான் ஒரு நாள் நான் வீட்டுத் தோட்டத்தில்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கஎன் மனைவி வாசலில் கல்லூரிக்குச் செல்லும்
பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கையில்பஸ் வருகிற சப்தம் கேட்டது
அவசரம் அவசரமாக எல்லோரும் எழுந்து ஓடினார்கள்
.பி.ஏ,எகனாமிக்ஸ் புவனாவும் எழுந்து வேகமாக ஓடினாள்

அவள் போகிற அவசரத்தில் கையில் இருந்தகைக் குட்டையை தவறவிட்டுப் போனதைநான் பார்த்தேன் .சரி எடுத்து வைத்துக் கொடுக்கலாம்
என நினைத்து நான் வாளியை வைத்துவிட்டுவாசலுக்கு வரும் முன்
காலை எட்டு மணிக்கே பஸ் பிடித்துப் போகும்பொறியியல் கல்லூரி மாணவன் பிரபாகரன்அதைக் கையில் எடுத்துவிட்டான்,
அதை எடுத்தவன்எங்களைக் கவனிக்காமல்சுற்று முற்றும் பார்த்துவிட்டு
சட்டைக்குள் போட்டுக் கொண்டான்.
அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது

அவன் டென்த் படிக்கிற காலங்க்ளில் இருந்துஇந்த ஸ்டாப்பில்தான் பஸ் ஏறுகிறான்.அவனுடைய பேச்சு நடவடிக்கை எல்லாமே
மிக நாகரீகமாக இருக்கும்ஒரு சாயலில் என் மகன் வயிற்றுப் பேரனின்
சாயலில் இருப்பதால் என மனைவிக்கு அவன்மீதுதனியானஅக்கறை.
விஷேச நாட்களில் ஏதேனும்தின்பண்டங்கள் இருந்தாலும் வாங்க மறுப்பான்
என்பதால் நாசூக்காக பிரசாதம் எனச் சொல்லிக்கொடுக்க முனைவாள்
அப்படிப்பட்டவனின் இந்தச் செய்கைஎனக்கு ஒருமாதிரி வித்தியாசமாகப் பட்டது.சரி பருவக் கோளாறு எனஅதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன்

மறு நாள் காலையில் எப்போதும் எட்டு மணிபஸ்ஸுக்கே போகும் பிரபாகரன் இன்றும் தாமதமாகஒன்பது மணிக்கு வந்து வாசலில் நின்றிருந்தான்பெண்கள் ஒவ்வொருவராக வர வர யாரையோ
எதிர்பார்ப்பவன் போல காலனிப் பக்கமே பார்த்தபடிநின்று கொண்டிருந்தான். தூரத்தில் புவனாவருவது தெரிந்ததும்மிக வேகமாக அவளை நோக்கிநடக்க ஆரம்பித்தான்

எனக்குள் சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது

நானும் அவசரம் அவசரமாக மாடிக்குப் போய்அவர்களைக் கவனிக்கத் துவங்கினேன்.நேராகபுவனாவிடம்சென்றவன்கொஞ்சம்பணிவாகக் குனிந்து என்னவோசொன்னபடிகைக்குட்டையைக் கொடுத்தான்.
அவளும் அதை மரியாதை நிமித்தம் சிரித்தபடி வாங்கி நன்றி சொல்வதுபோல் பட்டது

பின் பஸ் ஸ்டாப் வரை பிரபாகரன் என்னவோபேசிக் கொண்டேவந்தான்.
 சுய அறிமுகமாக இருக்கலாம்அவளும் மரியாதை நிமித்தம் தலையாட்டிக்
கொண்டே வருவதுதெரிந்தது
.
பின்சிறிதுநேரத்தில்பஸ்வரவும் புவனா பஸ்ஸில்ஏறிக்கொண்டாள்.
பிரபாகரனும் அதில் ஏறிக் கொண்டான்

அது பிரபாகரன் போக வேண்டிய பஸ் இல்லை

அப்புறம் பல நாட்கள் பிரபாகரன் அவன் போகவேண்டியஎட்டரை மணி பஸ்ஸில் போகவே இல்லைஎப்போதும் இந்த ஒன்பது மணி பஸ்ஸுக்குத்தான் வந்தான்மாலை கூட அவன் கல்லூரி மாணவர்கள் எல்லாம்
நாலு மணி பஸ்ஸில் வந்தால் இவன் தாமதமாகஅந்தக் கல்லூரிப் பெண்கள் வருகிற நேரத்தைஅனுசரித்து வரத் துவங்கினான்.

சில சமயம்சனிக்கிழமைகளில் புவனா மட்டும் கல்லூரி போவாள்
என் மனைவி கேட்டபோது ஸ்பெஷல் கிளாஸ் என்றாள்சொல்லி வைத்த்தைப் போல பிரபாகரனும் அன்றுஅதே பஸ்ஸில் கல்லூரி போய்க்கொண்டிருந்தான்
இப்படியே ஓராண்டு முடிந்தது

கோடை விடுமுறையில் ஒரு நாள் புவனா பெட்டிபடுக்கைககள் சகிதம் பஸ் ஸ்டாப் வந்திருந்தாள்உடன் அவளுடைய அக்காவும் அவருடைய கணவனும்
நின்றிருந்தார்கள்.

என் மனைவி புவனவைப் பார்த்து
 "லீவுக்கு ஊருக்கா " என்றாள்

புவனா அருகில் வந்து "இல்லை ஆண்டி வீட்டில்எல்லோரும் மாஸ்டா டிகிரியை சென்னையில் செய்யச்சொல்கிறார்கள் அப்போதுதான் எக்ஸ்போஸர்நன்றாக இருக்கும் என்கிறார்கள்.
எனக்கு இந்த ஊர் விட்டுப் போகமனமே இல்லை " என்றாள்
அவள் முகம் வாட்டமாக இருந்தது

அப்புறம் பஸ் வந்ததும் அவர்கள் ஏறிப் போவிட்டார்கள்

அடுத்த ஆண்டு கல்லூரி திறந்த நாளில் இருந்துஎங்கள் பஸ் ஸ்டாப் மீண்டும்
களைகட்ட ஆரம்பித்துவிட்டதுபல புதிய முகங்களுடன் பழைய முகங்களும் சேரபஸ் ஸ்டாப்பே ஒரு நந்தவனம் போல இருந்தது

எல்லோருடைய முகங்களிலும்சந்தோஷச் சாயலைப் பார்க்க
எங்களுக்கும் மிக பூரிப்பாய் இருந்தது

அந்தக் கூட்டத்தில் பிரபாகரன் மட்டும்வித்தியாசமாக இருந்தான்
பழைய கல கலப்பில்லை.அவன் மெலிந்து வாடிப் போய் இருந்ததும்
தாடி மீசையும் அவனைத் தனித்துக் காட்டியது

உண்மையில் எனக்கும் என் மனைவிக்கும்அவனைப் பார்க்கையில் மனம் என்னவோ செய்தது.எப்படியாவது ஆறுதல் சொல்லிஅவனை பழைய நிலைக்குக் கொண்டுவரலாம்என நினைத்தோம்.

ஆனால் மிகச் சாமர்த்தியமாகமறுபுறம் உள்ள மர நிழலில் நிற்பதைப் போல நின்றுஅல்லது மிகச் சரியான நேரத்திற்கு வருவதைப்
போல வந்து பஸ் ஏறி எங்க்களை தவிர்த்தான்

எங்களுக்கு அவன் செயல்கள் மிகுந்த வேதனை அளித்தது
அவன் இவ்வாறு நடந்து கொள்வதன் சரியான காரணத்தைத்
தெரிந்து கொண்டு அவனுடன் பேச முயல்வோம்எனஅவன் இல்லாத நேரத்தில்அவன் நண்பன் கார்த்திக்கிடம் விசாரித்தோம்

அவன் சுருக்கமாக "போன வருடத்தில் கொஞ்சம்டைவர்ட் ஆகிவிட்டான் ஆண்டி.யார் சொல்லியும் கேட்கவில்லை

முதல் இரண்டு வருடம் அவன்தான் எங்கள் வகுப்பில்முதல் மாணவன்
போன வருடம் சரியாகவகுப்புக்கு வரவில்லை.அரியஸ் விழுந்துவிட்டது
இந்த வருடமும் அப்படித்தான் இருக்கிறான்.வருடம் முடிப்பான்
கோர்ஸ் முடிப்பது கஷ்டம் "என்றான்

இவன் உறுதியாக காதல் விவகாரத்தில்தான்
திசை தவறி இருப்பான்என நாங்கள் நினைத்துக் கொண்டோம்

.மகா நதி சினிமாவில்கமலும் அவரது குடும்பமும்கௌரவமாக மிக சந்தோஷமாக ஊரே மதிக்கும்படி இருக்கும்

ஒரு நாள் தங்கள் முன்னே செல்கின்ற காரைப் பார்த்து"அது நம்முடைய பழைய காரைப் போல இருக்கிறதுஅதை விரட்டிப் பிடிப்பா "என
அவர் மகள் சொல்வாள்கமலும் விரட்டிப் பிடிப்பார்.

அவர்கள் மட்டும்அந்தக் காரைத் தொடர வில்லையெனில்
அவர்கள் வாழ்வில்அத்தனை சீரழவு ஏற்ப்பட்டிருக்க சந்தர்ப்பமே இல்லை

சனி அந்த ஒரு வார்த்தையில்நுழைந்ததைப் போல் பிரபாகரன் வாழ்க்கையில் அந்த தவறிய கைக்குட்டைநுழைந்ததோ என
எனக்குப் பட்டது

உண்மையில் புவனாவும் அவனைக் காதலித்தாளாஅல்லது இவனாக ஒருதலைப் பட்சமாக காதலைவளர்த்துக் கொண்டு அவஸ்தைப் படுகிறானா
என குழப்பமாக இருந்தது

முத்ல் ஒருமாதம்எங்கள் பஸ் ஸ்டாப்பில் வந்து பஸ் ஏறிக்
கொண்டிருந்தவன் அப்புறம் வரவேயில்லை

நண்பர்களிடம் விசாரித்த போது "இந்த ஸ்டாப் வரப்பிடிக்கவில்லை எனச் சொல்லி அடுத்த ஸ்டாப்பில் ஏறுகிறான் " என்றார்கள்

சில நாட்கள் கழித்து விசாரித்த போதுகல்லூரிக்கு சரியாக வருவதில்லை என்றார்கள்

ஊரில் இல்லை என்றார்கள்.

நாங்களும் அவனை மறந்து போனோம்

கதையும் இங்குமுடிந்து போனது

சினிமாவில் தவிர்க்க முடியாமல் சில
வருடங்களுக்கு பின்பு எனக் காட்டுவதைப் போல..

ஐந்து வருடங்க்களுக்கு பின்பு ஒரு நாள்ஒரு வெள்ளிக்கிழமை நாங்கள் பூஜை வேலையாகபிஸியாக இருக்கையில் வாசலில் யாரோ "ஆண்டி "
என அழைப்பது கேட்க வாசலை எட்டிப் பார்த்தேன்

புவனா கைக் குழந்தையுடன் கேட்அருகேநின்றுகொண்டிருந்தாள்.அவசரமாக கதவைத் திறந்து
உள்ளே வரும்படி அழைத்தேன் வெளியில்
நின்றிருந்தவரைக் காட்டி என் கணவர்
என அறிமுகப் படுத்தினாள்

என்  மனைவிக்கு ரொம்ப சந்தோஷம்."வெள்ளிக்கிழமையும் அதுவுமா தம்பதிகள் வீட்டுக்குவந்தது ரொம்ப சந்தோஷம் " எனச் சொல்லி
தாம்பூலம் வைத்துக் கொடுத்து உபசரித்தாள்

 பின் குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு
குழந்தைக்கு என்ன பேரடி வைத்திருக்கிறாய் "என்றாள்

"பிரபா " என்றாள் புவனா

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதைப் பார்த்து என்ன நினைத்தாளோ"இவங்க அம்மா பேரு பிரபாவதி

அதுதான் சுருக்கமாக
பிரபா " என்றாள்

அடங்காத மனசு

நான்எங்கள்வீட்டுநடுக்கூடத்திலஉட்கார்ந்துப்படித்துக்கொண்டிருக்கிறேன்.
எப்போதுமே நாங்கள்வீட்டில்  உட்காரும்போது இப்படித்தான்
தெற்குப் புற சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொள்வோம்

இப்படி உட்கார்ந்தால் இடது புறம் கூடம் ,நடை,திண்ணை தாண்டி தெருவாசல் வரைதெளிவாகத்தெரியும்அதேபோல வலது புறம் கூடம்,இருட்டுக் கூடம்சமையலறைவெளி சமயலறை,முற்றம்,
மாட்டுக் கொட்டகை,கிணறுதோட்டம் தாண்டிபின் தெரு வரை
அழகாகத் தெரியும்

நாங்கள்எப்போதுமேவாசல்கதவுகளைமூடுவதில்லைசாயந்திரத்திலிலிருந்து வாயில் புறம் வந்த லெட்சுமிகொல்லைப் புறம்போய் விடுவாள் என
பின்புற வாசல் மட்டும் பூட்டி விடுவோம்மற்றபடி எப்போதும் இருபுற கதவுகளும்திறந்தே இருக்கும்

இப்படி படித்துக் கொண்டிருந்தாலும்வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் இங்குஉட்கார்ந்து கொண்டால வாசலையும் கொல்லையையும்.கவனித்துக் கொள்வது ரொம்ப வசதி

 குனிந்து படித்துக் கொண்டிருக்கும் போதேதிடுமென வாசல் பக்கம் யாரோ வருவது போலநிழலாட திரும்பிப் பார்க்கிறேன்.எனக்கு "பக்" என்றதுசெத்துப் போன வெங்கு தாத்தா தடியை ஊன்றியபடி படியேறிக் கொண்டிருந்தார்.

எனக்கு கைகால்நடுக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது
என்னசெய்வது எனத்தெரியவில்லை.

ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டுமிக வேகமாக ஓடி வாசல் கதவை மூடப் பார்க்கிறேன்அதற்குள் அவர் வாசல் தாண்டி திண்ணைக்குள்
நுழைந்து விட்டார்.

ஓடி வந்த அவசரத்தில் டிராயர் வேறகழற ஆரம்பித்துவிட்டது.யோசிப்பதற்கு நேரமில்லைசடாரெனப் பாய்ந்து அவர் உள்ளே நுழையாதபடி
மண்டி போட்டு அவர் முட்டியோடு சேர்த்துப்பிடித்துக் கொண்டு "தாத்தா நீங்க செத்துப் போயாச்சுஇனிமே நீங்கள்வீட்டுக்குள் வரக்கூடாது ஆகாது "
என கத்துகிறேன்

அவர் என்னைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லைஎன் பிடிக்குள் அவர் இல்லவே இல்லைஅவர் பாட்டுக்கு நடந்து நடைக்கு வந்து விட்டார்

ஏற்கெனவே எனக்கு நடைரூம்  என்றாலே பயம்அதில் அப்பா தங்கை  பெரிய பாட்டி ஆகியோரின்உடல்களை படுக்க வைத்துப் பார்த்ததிலிருந்து
பகலில் நடைப்பக்கம் வந்தால் கூடகண்ணை மூடிக் கொண்டுதான் வாசல் பக்கம் வருவேன்இப்போது இவர் வேறு அங்கு நிற்க உடல் நடுங்கத் துவங்கியது

வெங்கு தாத்தா இப்போதுதான் என்னைப் பார்ப்பது போல
"நான் இங்கிருந்துதான்  சுடுகாடு போக ஆசைப் பட்டேன்என் நேரம் நடக்காமப் போச்சு " என்று சொல்லியபடிமேற்கொண்டு வீட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார்

நானும் விடாது " உள்ளே போகாதீர்கள் வெங்குத் தாத்தாவீட்டிற்கு ஆகாது தாத்தா வந்தவுடன் வாங்க தாத்தா "என கத்திக் கொண்டே பின்னால் போனேன்

அவர் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லைஒவ்வொரு இடமாக நின்று  ஏதோ சிற்பத்தைரசிப்பதைப் போலரசிப்பதும் பின் தொடர்ந்து
நடப்பதுமாக வந்து சமயலறையில்கொஞ்ச நேரம் நின்றார்.பின் என்னை பார்த்து"சமையலறையில்மட்டும் கொஞ்சம் வேலை
பார்த்திருக்கிறானாக்கும் " என்றார்

எனக்கு இப்போது எரிச்சல் அளவு கடந்து போயிற்று"எங்கள் வீடு நாங்கள் என்னவும் செய்வோம்உங்களுக்கென்ன ஆச்சு " என்றேன்

அவர் நிதானமாக"உங்க வீடா உங்க தாத்தனைக்கேட்டுப் பாருஒவ்வொரு செங்கலா நான் அடுக்கிரசித்து கட்டிய வீடாக்கும் "என்றார்

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.பயம் ஒருபக்கம்வீட்டில் யாரும் இப்போது பார்த்துஇல்லையே என்கிற எரிச்சல் ஒருபக்கம்
எப்படியும் இவரை வெளியே துரத்திவிடவேண்டும்என்கிற வெறி ஒருபக்கம்
இனி வேறு வழியில்லை .கொல்லைப்புறவாசலைத் தாண்டியதும்கதவைச் சட்டெனப்பூட்டிவிடுவோம் என மெதுவாக
அவர் பின்னாலேயே நடக்கத் துவங்கினேன்

நான் எதிர்பார்த்தபடியே பின் புற வாசல்நிலையில் நின்று பின்புறத்தை ஒரு நோட்டம் விட்டார்.நான் கதவடைக்கரெடியாக இருந்தேன்.
என்ன நினைத்தாரோ சட்டென திரும்பவும்உள்ளே திரும்பி நடக்கத் துவங்கிவிட்டார்

இனி இவரை உள்ளே விட்டால் போச்சு என சட்டெனதரையில் விழுந்து அவர் கணுக்காலை கெட்டியாகப்பிடித்துக் கொண்டு எவ்வளவு சப்தமாகக் கத்த முடியுமோஅவ்வளவு சப்தமாக கண்ணை மூடிக்கொண்டுகத்தத் துவங்கினேன்.இப்போதுஅவர் கால்கள் இரண்டும்என் கைப்பிடியில் இருந்தது.அவரால் நகரமுடியவில்லை

நான் மெதுவாக கண்விழித்துப் பார்த்தபோதுஎன் அம்மாவின்கைகளை கெட்டியாகப் பிடித்தபடிஅவர்கள் மடியில்குப்புறப் படுத்திருந்தேன்.
புரண்டு திரும்பிப் பார்க்கையில்தாத்தாவும் பாட்டியும் குனிந்து என்னையே
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கூடத்தில் சுவற்றில்தெரிந்த அவர்கள் நிழல்கள் இன்னும் என் பயத்தை
அதிகமாக்கிக் கொண்டிருந்தது நிச்சயமாகஅது கனவில்லைவெங்குதாத்தா
உள்ளே தான் இருக்கிறார் எனக் கத்தவேண்டும்போல இருந்தது கத்தவும் செய்தேன்.சப்தம்தான் வெளியே வரவில்லை

"உன் பேரன் என்னவோ பேய் கனவு கண்டு பயந்திருக்கிறான்
சாமி கூண்டில் இருந்து விபூதி எடுத்து நெற்றியில் வை
அப்படியே வாயிலும் போட்டு தண்ணீர் கொஞ்சம்
குடிக்கக் கொடு "எனச் சொல்லி தாத்தா அவர் கட்டிலுக்கு
படுக்கப் போய்விட்டார்

"நிலைக்கு நேராக படுக்காதே எனச் சொன்னால்கேட்டால்தானே " எனச் சொல்லியபடி  என் நெற்றியில்திரு நீறு பூசி அப்படியே கொஞ்சம் வாயிலும் போட்டுகொஞ்சம் தண்ணீரை குடிக்கவைத்தாள் பாட்டி
நான் மெதுவாக எழுந்து உட்கார்ந்தேன்

"என்னடா கனவு கத்தி ஊரையே கூட்டுகிற மாதிரி "
நெஞ்சைத் தடவி விட்டபடிக் கேட்டாள் அம்மா

"நிஜம்மா ம்மா செத்துப் போன வெங்குத்தாத்தா
வீட்டுக்கு வந்தார் .இப்போ கூட உள்ளே இருக்கார்
நம்பும்மா " என்றேன்

"சரி சரி விடிஞ்சு போச்சு நீ  போய் தாத்தாகிட்டபடுத்துக்கோ.நான் உள்ளே இருக்கிறாரான்னு பாக்கிறேன் "எனச் சொல்லி அம்மா எழுந்து வாசல் தெளிக்கப் போனாள்நான் ஓடிப் போய் தாத்தாவை
கட்டிப் பிடித்துப் படுத்துக் கொண்டேன்

"என்ன வெக்குத் தாத்தா ரொம்ப பய முறுத்திவிட்டானா  "என என்னைத் தடவிக் கொடுத்தபடியே தாத்தா கேட்டார்
எனக்கு அது கொஞ்சம் தெம்பாகவும் இருந்ததுகொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது

"இல்லை தாத்தா செத்தவர் உள்ளே வரக்கூடாதுன்னு
கத்திக் கத்தி சொல்றேன் கேக்காம உள்ளே வர்ராரு
கேட்டா என் வீடு உன் தாத்தன் கிட்ட வேற கேளுன்னு
சொல்றாரு.அவர் வீடா தாத்தா உன் வீடுதானே தாத்தா "
என்கிறேன்

"அப்பிடிச்சொன்னானா " எனச் சொன்னவர் சிறிது நேரம்எதையோ நினைத்தபடி பேசாமல் இருந்தார்
பின் அவரே அவருக்கே சொல்லிக் கொள்ளுகிற மாதிரி
பேசத் துவங்கினார்

"அவன் சொல்வது நிஜம்தான் அவன்தான்இந்த வீட்டை கட்டினான்.ஆசை ஆசையாபாத்துப் பாத்துக் கட்டினான்.அதிகக் கடன் ஏறிப்போச்சு
பொண் பிள்ளைங்க ..கல்யாணம் காச்சின்னு செலவு கூடிப் போச்சு..
.சமாளிக்க முடியாம
எங்கிட்டதான் வித்தான்.

உங்க அம்மா சின்னப் புள்ளையா
இருக்கிறப்பவே இதுவெல்லாம் நடந்து போச்சு
தெருவில் வெங்கையாத் தாத்தா அவ்வளவு வசதியா
வாழ்ந்தவருன்னு இப்ப இருக்கிற யாருக்குமே தெரியாது

போன வருஷம் சாகிறதுக்கு முன்னாடி கூடவீட்டை ஒருதடவை நல்லா  பாத்துக்கறேண்டான்னுசொல்லி பாத்துட்டுப் போனான்.
ரொம்ப மனசு சரியில்லைன்னு போன இப்படி இங்கே தான்
கூடத்திலை வந்து உட்கார்ந்துப்பான்

எனக்கு கூட அவங்கிட்ட வாங்கி இருக்கக் கூடாதோன்னு
அப்பப் அப்பத் தோனும்....."

தாத்தா பேசிக் கொண்டே இருந்தார்
நான் எப்ப தூங்கினேன் என்று எனக்கேத் தெரியவில்லை
நான் விழித்துப் பார்த்தபோது நன்றாக விடிந்திருந்தது
அவசரம் அவசரமாக குளித்து முடித்து
வழக்கம்போல ஈஸ்வரன் கோவிலுக்கு சாமி கும்பிடக்
கிளம்பினேன்

அம்மா சமையல் கட்டிலிருந்து
" நீ சின்னப் பையன் இல்லை ஆறு முடிச்சு
ஏழு போகப் போறே.படிப்போட தைரியத்தையும் கொடுன்னு
அம்பாள வேண்டிண்டு வா "ன்னு கத்தினாள்

நான் மண்டைய ஆட்டிவிட்டு தெருவுக்கு வந்தேன்
வாசலுக்கு வந்ததும் என்னையும் அறியாமல் ஏனோ
தெருவுக்கு நடுவில் இருந்த வெங்குத்தாத்தா பையன்
வீட்டைத்தான் பார்த்தேன்

வாசலில் ரிக்க்ஷாவில் இருந்து நாராயணன் சாஸ்திரிகளும்
அவர் அசிஸ்டெண்டும் இறங்கி அவர்கள் வீட்டுக்குள்
போய்க் கொண்டிருந்தார்கள்.என்னவாக இருக்கும்
என யோசித்தபடி நடக்கத் துவங்கினேன்

வெங்குத்தாத்த விட்டுக்கு எதிர்வீடுதான்  கோபால் வீடு
அவனும் வாசலில் இருந்து ரிக்க்ஷாவில் இருந்து
பை ,சட்டி பானைகளை இறக்குவதை வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருந்தான்

நான் அவன் அருகில் போய் " இவர்கள் வீட்டில்
என்ன விஷேசம்  "என்றேன்

"உனக்குத் தெரியாதா வெங்குத்தாத்தா செத்து இன்றோடு
ஒரு வருஷம் ஆகிப் போச்சு.இன்று தலை திவசம் " என்றான்

அமானுஷ்யம் -

இது நடந்து பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும்

அப்போது நான மதுரையின் தென்பகுதியில்அரசுப் பணியில் இருந்தேன்.அதிகாரம் அதிகம் உள்ளஅரசுப் பணி என்பதாலும் அதிகமாகமக்கள் தொடர்பஉள்ள துறை என்பதாலும் கொஞ்சம் அதிக
பணி நெருக்கடி இருக்கும்.குறிப்பாகஅரசியல்வாதிகளின் கெடுபிடியும்
மக்கள் பிரதி நிதிகளின் கெடுபிடியும் அதிகம் இருக்கும்

மதுரையில் சீதோஷ்ணம்  மட்டும் இல்லை அரசியலும்எப்போதும் கொஞ்சம் அதிக சூடாகவே இருக்கும்அதனால் சட்டத்திற்கு புறம்பாக மக்கள்
நலத் திட்டங்களில்கொஞ்சம்அப்படி இப்படிஇருக்கவேண்டியிருக்கும்.
அப்படி இருக்கிறஊழியருக்கு கொஞ்சம் கூடுதலாக
அதிகாரமும் இருக்கும்கொஞ்சம் லாபமும் இருக்கும்

நான் கொஞ்சம் வித்தியாசமானவன்.சிறுவயதில் இருந்தேசமூக நல இயக்கங்களில் பங்கேற்றுபழகியவன் என்பதால்ஊழலுக்கும் எனக்கும்
ஏழாம் பொருத்தம்.எனவே சட்டத்திற்கு புறம்பாகஎதுவும் செய்யமாட்டேன்.

அதே சமயம் அதிகாரமிக்க அரசியல்வாதிகள்சில தவறான சிபாரிசுக்கு வந்தால் அதை எப்படிசட்டத்திற்கு உட்படுத்துவதுஎன அவர்களுக்கு விளக்கி
அதை சட்டப்படியே செய்து கொடுக்க முயல்வேன்

இது கொஞ்சம் காலதாமதம் ஆகும் என்றாலும்எனக்கு பங்கு கொடுக்கவேண்டியதில்லைஎன்பது ஒரு வசதிஎன் மூலம் வருகிற சிபாரிசுகளில்தவறு இருக்காது என்பதால்மாவட்ட அளவில்காரியம் சட்டென முடிந்துவிடும் என்பதுஇன்னொரு வசதிஇதுவும் ஒரு வகையில் லாபம்
என்பதால்  அரசியல்வாதிகள்என்னையும் மாற்ற முயலாமல் சகித்து வைத்துக் கொள்வார்கள்

எனவே என்னை அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கும்
அதிகாரிகளுக்கும் பிடிக்கும்

இது மக்கள் நலத் திட்ட தொடர்புடைய அதிக பணப் புழக்கமுள்ளஊழல் செய்வதற்கு அதிகவாய்ப்புள்ள துறை என்பதால் பிற துறைகளைவிட
அதிக உயர் அதிகாரிகளின் ஆய்வும்அதிகம்  இருக்கும்.
அதில் கூட "சர்ப்ரைஸ் செக்  "எனச்சொல்லக்கூடிய
 திடீர்ஆய்வுகள் அதிக இருக்கும்

எப்போது எந்த உயர் அதிகாரி சென்னையில் இருந்துவருவார்எந்தப் பகுதியைப் பகுதியைப் பார்வையிடுவாரஎன்கிற பயம்கீழ்மட்டத்தில் பணியாற்றுகிறஎல்லா அதிகாரிகளுக்கும்எப்போதும் இருக்கும்
அவர்கள் அனைவரும் அப்படிதிடீரென ஒரு அதிகாரி வந்தால்எப்படிச் சமாளிப்பது எனஒரு திட்டமும் வைத்திருந்தனர்
விமான நிலையத்திற்கு அருகில் நான் பணிசெய்யும்

பகுதி இருப்பதாலும்ஊழல் பிரச்சனை ஏதும் இருக்காது என்பதாலும் உடன்என் பகுதியைக் காட்டிவிடுவதுஎன ஏகமனதாக தீர்மானம் செய்து செயல் படுத்திவந்தனர்.எனக்கும் அது உடன்பாடுதான்
ஆனால் அதில் ஒரு சிரமம்இருந்தது.இங்குதான் கதையே ஆரம்பிக்கிறது

சென்னையில் இருந்து கள ஆய்வுக்கு வருகிறஅதிகாரிகள் மக்களிடம்நேரடியாக பேசித்தெரிந்து கொள்ளவும் விரும்புவார்கள்
அந்த மக்கள் மூலம் மாலை மரியாதை பெறுவதையும்
அந்த புகைப்படம் பத்திரிக்கைகளில் வருவதையும்
மிகவும் விரும்புவார்கள்நான் அதற்கு ஏற்றார்ப்போல
எப்போதும் எனது வண்டியில்கேமராவும்நாலைந்து சால்வைகளும் எப்போதும்வைத்திருப்பேன்.அதைமக்கள் பிரதி நிதிகளிடம்
கொடுத்து போடவைப்பதோடுஅதைமறு நாள் பத்திரிக்கையில்
வரவைப்பதற்கான ஏற்பாடுகளையும்மிகஅழகாக செய்துவிடுவேன்

சில சமயங்களில் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாகஉயர் மட்ட அதிகாரிகள்கூடுதலாக வந்து விடுவார்கள்.

அப்போது சால்வை கூடுதலாக வேண்டி இருக்கும்அவசரத்தில் 
மதுரையில் போய்வாங்கிவரவும் முடியாதுஅதற்கும்ஒரு மாற்று ஏற்பாடு செய்துவைத்திருந்தேன்

எனது பகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒருகருப்பண்ணசாமிகோவில் இருந்தது
ரொம்ப துடியான சாமி.மதுரையில் இருந்துதூத்துக்குடி வழியாகச் செல்லுகிறஅனைத்துவாகன ஓட்டிகளும்அங்கு வண்டியை நிறுத்தி
கருப்பணசாமிக்கு மாலைஅணிவித்து கும்பிட்டுவிட்டு
சிறிது இளைப்பாறிவிட்டுத்தான் போவார்கள்.

வண்டி வாகனம் கிடாவெட்டு எனஅந்த கோவில் எப்போதும்ஜே.ஜே என இருக்கும்நானும்செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் மாலைசாத்தி
கும்பிட்டுவிட்டுச் செல்வதால் அந்தக் கோவில் பூசாரி எனக்கு ரொம்பப் பழக்கம்

அவரிடம் ஒரு நாள் இதுபோல கூடுதலாக அதிகாரிகள்வந்த சமயம்அவசரத்திற்கு நான்கு மாலைகள்வேண்டும் எனச்
சொல்லஅவரும் என்னுடையசூழல் கருதி மாலைகள் கொடுத்ததோடு
"இனி எப்போது அவசரத்திற்குமாலை வேண்டுமென்றாலும்
இங்கு வந்து எடுத்துக் கொள்ளுங்கள்.ஆனால்
கருப்பணசாமிக்குமாலைக்கான பணத்தை உண்டியலில்
போட்டுவிட்டுஎடுத்துச் செல்லுங்கள் "எனஎ
னக்கு அனுமதிகொடுத்திருந்தார்.

நானும் அடிக்கடி தேவையானபோதுமாலைகளை
எடுத்துக் கொள்வதும்  அதற்குண்டான காணிக்கையினை
உண்டியலில் செலுத்துவதுமாககாலத்தைஓட்டிகொண்டிருந்தேன்
இதனால் நானும் கோவில் பூசாரியும் மிகவும்
நெருங்கிய பழக்கம்உள்ளவர்கள் ஆகிப் போனோம்

வழக்கம்போல அரசுப் பணியாளர்களுக்கு
எல்லோருக்கும் நேரும்பிரச்சனை எனக்கும் நேர்ந்தது
.மூன்றாண்டுகளுக்கு மேலாகதொடர்ந்து ஓரிடத்தில்
இருக்கக் கூடாது  என்கிறஉத்திரவினைபுதிதாக வந்த அரசு
மிக் கண்டிப்பாக அமல்படுத்தவேண்டும் என உத்தரவிட்டது

நான் ஏறக்குறைய  ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ஒரேஇடத்தில்
பணியாற்றிக் கொண்டிருந்தவன்என்பதால்எனக்கும்
மாறுதல் தவிர்க்கமுடியாததாகிவிட்டது.
நானும் குடும்ப சூழல்காரணமாகசில காலம் வெளியூரில்
பணியாற்றலாமே எனமதுரையின் மேற்குப்பகுதிக்குமாறுதல்
பெற்றுக் கொண்டுசென்றுவிட்டேன்எனக்கும் கோவிலுக்கும்பழைய பகுதிநண்ப்ர்களுக்குமான தொடர்புமுற்றிலுமாகஒரு மூன்று வருடம்
துண்டிக்கப் பட்டுப் போய்விட்டது

கடைசியாக ஓய்வு பெற ஓராண்டு மட்டும்இருக்கிற  நிலையில்வீட்டை ஒட்டிய பகுதில்வேலை பார்த்தால் கொஞ்சம்அலைச்சல் குறையும்
எனவும்ஓய்வுகாலச் சலுகைகள் பெற வசதியாகஇருக்கும் என எல்லோரும் சொல்லஎனக்கும் அதுவே சரியெனப் பட்டதால் உயர்அதிகரிகளிடம் பேசிமீண்டும் நான பணியாற்றியபழைய பகுதிக்கே  மாறுதல்பெற்றுக் கொண்டுவந்துவிட்டேன்.

ஆனால் பழையவேகம் எல்லாம்குறைந்து போனதுமுன்பு போல அதிகம் அலையமுடியவில்லை என்பதால் அதிகமாகவண்டியைபயன்படுத்தாமல் பஸ்ஸிலேயே போவதுமவருவதுமாகஎனது பணி சுமையையும் குறைத்துக்
கொண்டேன்.அவசிய மானால்அரசு வாகனத்தைப்பயன்படுத்துவதை இல்லையேல்இரண்டுசக்கர வாகனத்தையே பயன்படுத்தி வந்தேன்.

ஒரு குறிப்பிட்ட நாளில் பஸ் அதிகம் போகாதஒரு உள்ளடங்கியகிராமத்திற்கு போகவேண்டி வந்தது.இரு சக்கர வாகனத்தில் போனால்தான்
போய்வருவது எளிதாய்  இருக்கும் என வண்டியை
எடுத்துக் கொண்டுபோய்வேலைகளை முடித்துவிட்டு
வேகமாகத் திரும்பிக்கொண்டிருந்தேன்

அப்போது சாலையின் மேல் அந்தக் கோவில் பூசாரி நின்று கொண்டு
கையை காட்டினார்.அவர் வீடு அந்தப் பகுதியில்தான் இருந்தது
அங்கிருந்து கோவில் இரண்டு பர்லாங் தூரம் இருக்கும்
எப்போதும் அங்கிருந்து வருகிற தெரிந்த வண்டியில் ஏறிகோவிலில்
இறங்கிக் கொள்வது எப்போதும் அவர் பழக்கம்
நானும் பலமுறை அவ்வாறு கோவிலில் இறக்கி இருக்கிறேன்

அவர் முன்பு போல இல்லை  வய்தின். காரணமாகஉடல்தளர்ந்து போயிருந்தார்எனவே வண்டியில்ஏற்றுவதுசரியாக வருமா
என குழப்பமாக இருந்தது

வயதானகாலத்தில்சரியாக பிடித்துக்கொள்ளாமல்விழுந்துவிட்டால்அது வேறு பிரச்சனை ஆகுமேஎன பயமாக இருந்தது .அவர் என்னுடைய
ஒப்புதலைக் கூட  பெரிய விஷயமாகஎடுத்துக்கொள்ளவில்லைஎனது வண்டியின்பின்னிருக்கையில் ஒரு பக்கமாககால்களைப்
போட்டுக்கொண்டு போகும் படி சைகை காட்டினார்எனக்கும் வேறு வழியில்லை,அவரே தைரியமாகஅமரும்போதுநமக்கென்ன என வண்டியை
ஸ்டார்ட் செய்து ஓட்டத் துவங்கினேன்

வயதானவர் அமர்ந்திருக்கிறார் என்கிற ஜாக்கிரதைஉணர்வில்மிக மிக மெதுவாகத்தான் வண்டியைஓட்டிவந்தேன் மிகச் சரியாக  கோவில் அருகில்
வந்ததும்வண்டியைநிறுத்திஅவரைஇறங்கச்சொல்லித்திரும்பினேன்.
வண்டியில் அவர் இல்லை

எனக்கு திடுக்கிட்டுப் போனது .

இவ்வளவுஜாக்கிரதையாகஓட்டிவந்தும்தவற விட்டு விட்டோமே
என்கிற பயத்தில்மீண்டும் அவரைவண்டியில்ஏற்றிய  இடம் சென்று பார்த்தேன்.எங்கும் இல்லைஒருவேளை மிகச் சரியாக
ஏறுவதற்கு முன்பே நான் வண்டியைஎடுத்திருக்கலாம்என என்னை நானே சமாதானம்செய்து கொண்டுஅலுவலகம் சென்று விட்டேன்

மறுதினம் அந்தப் பகுதி கவின்சிலர் ஒரு வேலையாக
என்னிடம்வந்திருந்தார்.அவரிடம் பல விஷயங்களைப் பேசிவிட்டுஎன் மீது தவறு  இருக்கிறபயத்தில் மிக மெதுவாகப்  பேச்சுக் கொடுத்தேன்

" நேற்று கருப்பணசாமி கோவில் பூசாரிஆஸ்பத்திரி மேட்டில்லிப்ட் கேட்டார். அவசரத்தில்நிறுத்தாமல் வந்துவிட்டேன்எதுவும் சொன்னாரா "
என சம்பந்தமில்லாமல் சுற்றி வளைத்துக் கேட்டேன்
 அந்த கவுன்சிலர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்
"சரி நேற்று விழவைத்து விட்டு வந்தது  நான்தான் என
நானே உளறித்தொலைத்துவிட்டேனோ " எனத் தோன்றியது

அவர் மெதுவாகப் பேசத் துவங்கினார்" யார் அந்த பெருசா ?" என்றார்

"ஆமாம் " என்றேன்

" நேற்றா " என்றார்

" ஆமாம் " என்றேன்

அவர்மிக நிதானமாக

"அவர் செத்துப் போய் ஆறு மாதங்களுக்கு
மேலாகிவிட்டது "என்றார்