இந்தப் பாம்புப் பிரச்சனை வந்த நாள் முதல்எப்போது வீட்டிற்கு வந்தாலும் முதலில்வண்டியை நடு ரோட்டில் வைத்துவிட்டுகைகளால் சப்தம் கொடுத்தபடியும் செருப்புக் காலைதரையில் தேய்த்தபடியும் வாசல் கதவைத் திறந்துபின் வண்டியை ஸ்டார்ட்செய்து செட்டில்நிறுத்திவிட்டு பின் கதவைத் திறக்கும்படி குரல் கொடுப்பேன்
அப்போதுதான் மனைவி வாசலுக்கே வருவாள்இன்று என்றும் இல்லாத அதிசமாய் வாசல் படியில் மனைவியும் குழந்தைகளும் உட்கார்ந்திருக்க
ஆச்சரியப்பட்டுப் போனேன்
என் இரண்டாம் பெண்தான் மூன்று மணிக்கேஇன்று பாம்பு வீட்டைக் கிராஸ் செய்துபோய்விட்டதென்றும்அதுதான் தைரியமாக
வாசலில் உட்கார்ந்திருப்பதாகவும் சொன்னாள்
கூடுதல் தகவலாக இன்றுபாம்புக்கு செம தீனிஎன்றும் வயிறு உப்பலாக இருந்தது என்றும்அதனால் அது மிக மிக மெதுவாகஊர்ந்து சென்றது என்றும் எல்லோரும்வாசல் வராண்டாவில் இருந்தே அதைமிக நன்றாகப் பார்த்ததாகவும் சொன்னாள்
அவர்கள் கண்களில் பிரமிப்பு இருந்த அளவு பயம் இல்லை
எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது
முதன் முதலில் பாம்பைப் பார்த்த போதுஇருந்த பயம்அது படமெடுத்து வாசல் கதவில்நின்ற போதுஏற்பட்ட நடுக்கம் எல்லாம்எங்கே போனது என எனக்கே ஆச்சரியமாக இருந்தது
ஒருவேளை புரியாதது அல்லது புதியதுதான்முதலில் பயத்தையும் பதட்டத்தையும்ஏற்படுத்துமோ? எத்தனை மோசமானதாகிலும்
பழகிவிட்டால்பயமும் பதட்டமும்பறந்து விடுமோ எனத் தோன்றியது
பின் செயற்கரிய செயல் போல கிராமத்திற்குச் சென்று பாம்பு பிடிப்பவனைப் பார்த்து வந்தது குறித்தும்அடிக்காமலும் பிடிக்காமலும் அதை எளிதாகஇல்லாமல் செய்வது குறித்த தகவலையும்அவளிடம் ஆவலாக விவரிக்க அவள் "அப்படியா "என்கிற ஒற்றைக் குரலோடு முடித்துக் கொண்டாள்
எனக்கே எதற்கடா விளக்கினோம் என எரிச்சலாக வந்தது
மறு நாள் அலுவலக விடுமுறை என்பதால் நான்வீட்டிலேயே இருந்தேன். அந்த பாம்பு பிடிக்கும்பெரியவரும் காலையிலேயே வீட்டிற்கு அந்தத்
தலைவருடனே வந்து விட்டார்.வந்தவர்அது வருகிற வழி அது போகிற இடம் உத்தேசமாக்அது பதுங்கும் பொந்தின் திசை எல்லாம்காண்பிக்கச் சொன்னார்
.நாங்கள் காண்பித்தோம்
பின் அவர் மட்டும் நாங்கள் பொந்து இருக்கும்இடம் என குறிப்பிட்ட இடத்திற்கு சிறிது நேரம்உலாத்தினார்.பின் ஒரு குறிப்பிட்ட பொந்தின்
அருகில் லேசாக குனிந்து பார்த்தார்.
பின் என்னை மட்டும் அருகில் அழைத்தார்
பின் அவர் முன் இருந்த பொந்தைக் காண்பித்து
" இதற்குள்தான் ஐயா இருக்காக " என்றார்
"எப்படிச் சொல்கிறீர்கள் " என்றேன்
"அவங்க மூச்சுக் காத்துக்கே அத்தனை விஷமுண்டுபொந்து சுத்தி செத்துக் கிடக்கிற தட்டானையும்ஈயையும் பார்த்தீர்களா " என்றார்
அந்தப் பொந்தைச் சுற்றி நிறையத் தட்டான்களும்
ஈக்களும் இறந்து கிடந்தன
பின் மெதுவாக " இவக மூச்சுக் காத்துப் பட்டுஎல்லாம் செத்துக் கிடக்குதுகள்.இவக விஷத்துக்கு அவ்வளவு பவர் " என்றார்
பின் இடத்தை விட்டு வெளியேறி வீ ட்டைச் சுற்றிசிதறிக்கிடந்த செங்கல் நான்கைக் கையில் எடுத்துக்கொண்டு பொந்தின் வாய் இருந்த திசைக்குப் பின்னால்நின்று கொண்டார்.பின் கையில் துணியைச்
சுற்றிக் கொண்டு மெதுவாகக் குனிந்து முதல்செங்கல்லை பொந்தில் வாயில் அடைத்துமிக வேகமாக அடுத்து அடுத்து மூன்றுசெங்கல்லையும்அந்த பொந்திலேயே திணித்தார்.
பின் மண் வெட்டிஎடுத்துவரச் சொல்லி சுற்றி இருக்கிறமண்ணை வெட்டி அந்த இடத்தை மேடாக்கிவிட்டுவந்து வாசல் திண்ணையில் அமர்ந்தார்
அவர் தைரியமாகத் தன்னைக் காட்டிக் கொணடாலும்கண்களில் மிரட்சியும் உடல் நடுக்கமும் லேசாகத் தெரியத்தான் செய்தது
பின் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லிகுடித்துவிட்டு " ஊரையே மிரட்டுகிற இவகளுக்குபொந்து தோண்டவும் தெரியாது.பொந்தை அடைச்சா
வெளியே வரவும் தெரியாது " என்றார்

எங்கள் காம்பௌண்டிலும் அடிக்கடி பாம்புகளைப் பார்த்து எங்களுக்கும் பயம் விட்டுப்போச்சு. பாம்பு பிடிக்க ஒரு இளைஞன் ஒருமுறை வெட்டியாய் வந்து சென்றதை சென்ற வருடம் எங்கள் ப்ளாக்கில் பகிர்ந்திருந்தேன்!
ReplyDeleteபக்கம் மாற்றியாச்சா?
ReplyDeleteஅல்லது புதுப் பக்கமா?
வாழ்த்துகள்.
நிகழ்வுகளுக்கும் கதைக்கும் என
ReplyDeleteதனியாக ஒரு பக்கம் இருந்தால் நல்லது
என யோசித்தேன்
அதற்காகவே....
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அப்புறம் பாம்புக்கு என்னாச்சு? வரவே இல்லையா?
ReplyDelete