Tuesday, November 10, 2015

அமானுஷ்யம் -

இது நடந்து பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும்

அப்போது நான மதுரையின் தென்பகுதியில்அரசுப் பணியில் இருந்தேன்.அதிகாரம் அதிகம் உள்ளஅரசுப் பணி என்பதாலும் அதிகமாகமக்கள் தொடர்பஉள்ள துறை என்பதாலும் கொஞ்சம் அதிக
பணி நெருக்கடி இருக்கும்.குறிப்பாகஅரசியல்வாதிகளின் கெடுபிடியும்
மக்கள் பிரதி நிதிகளின் கெடுபிடியும் அதிகம் இருக்கும்

மதுரையில் சீதோஷ்ணம்  மட்டும் இல்லை அரசியலும்எப்போதும் கொஞ்சம் அதிக சூடாகவே இருக்கும்அதனால் சட்டத்திற்கு புறம்பாக மக்கள்
நலத் திட்டங்களில்கொஞ்சம்அப்படி இப்படிஇருக்கவேண்டியிருக்கும்.
அப்படி இருக்கிறஊழியருக்கு கொஞ்சம் கூடுதலாக
அதிகாரமும் இருக்கும்கொஞ்சம் லாபமும் இருக்கும்

நான் கொஞ்சம் வித்தியாசமானவன்.சிறுவயதில் இருந்தேசமூக நல இயக்கங்களில் பங்கேற்றுபழகியவன் என்பதால்ஊழலுக்கும் எனக்கும்
ஏழாம் பொருத்தம்.எனவே சட்டத்திற்கு புறம்பாகஎதுவும் செய்யமாட்டேன்.

அதே சமயம் அதிகாரமிக்க அரசியல்வாதிகள்சில தவறான சிபாரிசுக்கு வந்தால் அதை எப்படிசட்டத்திற்கு உட்படுத்துவதுஎன அவர்களுக்கு விளக்கி
அதை சட்டப்படியே செய்து கொடுக்க முயல்வேன்

இது கொஞ்சம் காலதாமதம் ஆகும் என்றாலும்எனக்கு பங்கு கொடுக்கவேண்டியதில்லைஎன்பது ஒரு வசதிஎன் மூலம் வருகிற சிபாரிசுகளில்தவறு இருக்காது என்பதால்மாவட்ட அளவில்காரியம் சட்டென முடிந்துவிடும் என்பதுஇன்னொரு வசதிஇதுவும் ஒரு வகையில் லாபம்
என்பதால்  அரசியல்வாதிகள்என்னையும் மாற்ற முயலாமல் சகித்து வைத்துக் கொள்வார்கள்

எனவே என்னை அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கும்
அதிகாரிகளுக்கும் பிடிக்கும்

இது மக்கள் நலத் திட்ட தொடர்புடைய அதிக பணப் புழக்கமுள்ளஊழல் செய்வதற்கு அதிகவாய்ப்புள்ள துறை என்பதால் பிற துறைகளைவிட
அதிக உயர் அதிகாரிகளின் ஆய்வும்அதிகம்  இருக்கும்.
அதில் கூட "சர்ப்ரைஸ் செக்  "எனச்சொல்லக்கூடிய
 திடீர்ஆய்வுகள் அதிக இருக்கும்

எப்போது எந்த உயர் அதிகாரி சென்னையில் இருந்துவருவார்எந்தப் பகுதியைப் பகுதியைப் பார்வையிடுவாரஎன்கிற பயம்கீழ்மட்டத்தில் பணியாற்றுகிறஎல்லா அதிகாரிகளுக்கும்எப்போதும் இருக்கும்
அவர்கள் அனைவரும் அப்படிதிடீரென ஒரு அதிகாரி வந்தால்எப்படிச் சமாளிப்பது எனஒரு திட்டமும் வைத்திருந்தனர்
விமான நிலையத்திற்கு அருகில் நான் பணிசெய்யும்

பகுதி இருப்பதாலும்ஊழல் பிரச்சனை ஏதும் இருக்காது என்பதாலும் உடன்என் பகுதியைக் காட்டிவிடுவதுஎன ஏகமனதாக தீர்மானம் செய்து செயல் படுத்திவந்தனர்.எனக்கும் அது உடன்பாடுதான்
ஆனால் அதில் ஒரு சிரமம்இருந்தது.இங்குதான் கதையே ஆரம்பிக்கிறது

சென்னையில் இருந்து கள ஆய்வுக்கு வருகிறஅதிகாரிகள் மக்களிடம்நேரடியாக பேசித்தெரிந்து கொள்ளவும் விரும்புவார்கள்
அந்த மக்கள் மூலம் மாலை மரியாதை பெறுவதையும்
அந்த புகைப்படம் பத்திரிக்கைகளில் வருவதையும்
மிகவும் விரும்புவார்கள்நான் அதற்கு ஏற்றார்ப்போல
எப்போதும் எனது வண்டியில்கேமராவும்நாலைந்து சால்வைகளும் எப்போதும்வைத்திருப்பேன்.அதைமக்கள் பிரதி நிதிகளிடம்
கொடுத்து போடவைப்பதோடுஅதைமறு நாள் பத்திரிக்கையில்
வரவைப்பதற்கான ஏற்பாடுகளையும்மிகஅழகாக செய்துவிடுவேன்

சில சமயங்களில் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாகஉயர் மட்ட அதிகாரிகள்கூடுதலாக வந்து விடுவார்கள்.

அப்போது சால்வை கூடுதலாக வேண்டி இருக்கும்அவசரத்தில் 
மதுரையில் போய்வாங்கிவரவும் முடியாதுஅதற்கும்ஒரு மாற்று ஏற்பாடு செய்துவைத்திருந்தேன்

எனது பகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒருகருப்பண்ணசாமிகோவில் இருந்தது
ரொம்ப துடியான சாமி.மதுரையில் இருந்துதூத்துக்குடி வழியாகச் செல்லுகிறஅனைத்துவாகன ஓட்டிகளும்அங்கு வண்டியை நிறுத்தி
கருப்பணசாமிக்கு மாலைஅணிவித்து கும்பிட்டுவிட்டு
சிறிது இளைப்பாறிவிட்டுத்தான் போவார்கள்.

வண்டி வாகனம் கிடாவெட்டு எனஅந்த கோவில் எப்போதும்ஜே.ஜே என இருக்கும்நானும்செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் மாலைசாத்தி
கும்பிட்டுவிட்டுச் செல்வதால் அந்தக் கோவில் பூசாரி எனக்கு ரொம்பப் பழக்கம்

அவரிடம் ஒரு நாள் இதுபோல கூடுதலாக அதிகாரிகள்வந்த சமயம்அவசரத்திற்கு நான்கு மாலைகள்வேண்டும் எனச்
சொல்லஅவரும் என்னுடையசூழல் கருதி மாலைகள் கொடுத்ததோடு
"இனி எப்போது அவசரத்திற்குமாலை வேண்டுமென்றாலும்
இங்கு வந்து எடுத்துக் கொள்ளுங்கள்.ஆனால்
கருப்பணசாமிக்குமாலைக்கான பணத்தை உண்டியலில்
போட்டுவிட்டுஎடுத்துச் செல்லுங்கள் "எனஎ
னக்கு அனுமதிகொடுத்திருந்தார்.

நானும் அடிக்கடி தேவையானபோதுமாலைகளை
எடுத்துக் கொள்வதும்  அதற்குண்டான காணிக்கையினை
உண்டியலில் செலுத்துவதுமாககாலத்தைஓட்டிகொண்டிருந்தேன்
இதனால் நானும் கோவில் பூசாரியும் மிகவும்
நெருங்கிய பழக்கம்உள்ளவர்கள் ஆகிப் போனோம்

வழக்கம்போல அரசுப் பணியாளர்களுக்கு
எல்லோருக்கும் நேரும்பிரச்சனை எனக்கும் நேர்ந்தது
.மூன்றாண்டுகளுக்கு மேலாகதொடர்ந்து ஓரிடத்தில்
இருக்கக் கூடாது  என்கிறஉத்திரவினைபுதிதாக வந்த அரசு
மிக் கண்டிப்பாக அமல்படுத்தவேண்டும் என உத்தரவிட்டது

நான் ஏறக்குறைய  ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ஒரேஇடத்தில்
பணியாற்றிக் கொண்டிருந்தவன்என்பதால்எனக்கும்
மாறுதல் தவிர்க்கமுடியாததாகிவிட்டது.
நானும் குடும்ப சூழல்காரணமாகசில காலம் வெளியூரில்
பணியாற்றலாமே எனமதுரையின் மேற்குப்பகுதிக்குமாறுதல்
பெற்றுக் கொண்டுசென்றுவிட்டேன்எனக்கும் கோவிலுக்கும்பழைய பகுதிநண்ப்ர்களுக்குமான தொடர்புமுற்றிலுமாகஒரு மூன்று வருடம்
துண்டிக்கப் பட்டுப் போய்விட்டது

கடைசியாக ஓய்வு பெற ஓராண்டு மட்டும்இருக்கிற  நிலையில்வீட்டை ஒட்டிய பகுதில்வேலை பார்த்தால் கொஞ்சம்அலைச்சல் குறையும்
எனவும்ஓய்வுகாலச் சலுகைகள் பெற வசதியாகஇருக்கும் என எல்லோரும் சொல்லஎனக்கும் அதுவே சரியெனப் பட்டதால் உயர்அதிகரிகளிடம் பேசிமீண்டும் நான பணியாற்றியபழைய பகுதிக்கே  மாறுதல்பெற்றுக் கொண்டுவந்துவிட்டேன்.

ஆனால் பழையவேகம் எல்லாம்குறைந்து போனதுமுன்பு போல அதிகம் அலையமுடியவில்லை என்பதால் அதிகமாகவண்டியைபயன்படுத்தாமல் பஸ்ஸிலேயே போவதுமவருவதுமாகஎனது பணி சுமையையும் குறைத்துக்
கொண்டேன்.அவசிய மானால்அரசு வாகனத்தைப்பயன்படுத்துவதை இல்லையேல்இரண்டுசக்கர வாகனத்தையே பயன்படுத்தி வந்தேன்.

ஒரு குறிப்பிட்ட நாளில் பஸ் அதிகம் போகாதஒரு உள்ளடங்கியகிராமத்திற்கு போகவேண்டி வந்தது.இரு சக்கர வாகனத்தில் போனால்தான்
போய்வருவது எளிதாய்  இருக்கும் என வண்டியை
எடுத்துக் கொண்டுபோய்வேலைகளை முடித்துவிட்டு
வேகமாகத் திரும்பிக்கொண்டிருந்தேன்

அப்போது சாலையின் மேல் அந்தக் கோவில் பூசாரி நின்று கொண்டு
கையை காட்டினார்.அவர் வீடு அந்தப் பகுதியில்தான் இருந்தது
அங்கிருந்து கோவில் இரண்டு பர்லாங் தூரம் இருக்கும்
எப்போதும் அங்கிருந்து வருகிற தெரிந்த வண்டியில் ஏறிகோவிலில்
இறங்கிக் கொள்வது எப்போதும் அவர் பழக்கம்
நானும் பலமுறை அவ்வாறு கோவிலில் இறக்கி இருக்கிறேன்

அவர் முன்பு போல இல்லை  வய்தின். காரணமாகஉடல்தளர்ந்து போயிருந்தார்எனவே வண்டியில்ஏற்றுவதுசரியாக வருமா
என குழப்பமாக இருந்தது

வயதானகாலத்தில்சரியாக பிடித்துக்கொள்ளாமல்விழுந்துவிட்டால்அது வேறு பிரச்சனை ஆகுமேஎன பயமாக இருந்தது .அவர் என்னுடைய
ஒப்புதலைக் கூட  பெரிய விஷயமாகஎடுத்துக்கொள்ளவில்லைஎனது வண்டியின்பின்னிருக்கையில் ஒரு பக்கமாககால்களைப்
போட்டுக்கொண்டு போகும் படி சைகை காட்டினார்எனக்கும் வேறு வழியில்லை,அவரே தைரியமாகஅமரும்போதுநமக்கென்ன என வண்டியை
ஸ்டார்ட் செய்து ஓட்டத் துவங்கினேன்

வயதானவர் அமர்ந்திருக்கிறார் என்கிற ஜாக்கிரதைஉணர்வில்மிக மிக மெதுவாகத்தான் வண்டியைஓட்டிவந்தேன் மிகச் சரியாக  கோவில் அருகில்
வந்ததும்வண்டியைநிறுத்திஅவரைஇறங்கச்சொல்லித்திரும்பினேன்.
வண்டியில் அவர் இல்லை

எனக்கு திடுக்கிட்டுப் போனது .

இவ்வளவுஜாக்கிரதையாகஓட்டிவந்தும்தவற விட்டு விட்டோமே
என்கிற பயத்தில்மீண்டும் அவரைவண்டியில்ஏற்றிய  இடம் சென்று பார்த்தேன்.எங்கும் இல்லைஒருவேளை மிகச் சரியாக
ஏறுவதற்கு முன்பே நான் வண்டியைஎடுத்திருக்கலாம்என என்னை நானே சமாதானம்செய்து கொண்டுஅலுவலகம் சென்று விட்டேன்

மறுதினம் அந்தப் பகுதி கவின்சிலர் ஒரு வேலையாக
என்னிடம்வந்திருந்தார்.அவரிடம் பல விஷயங்களைப் பேசிவிட்டுஎன் மீது தவறு  இருக்கிறபயத்தில் மிக மெதுவாகப்  பேச்சுக் கொடுத்தேன்

" நேற்று கருப்பணசாமி கோவில் பூசாரிஆஸ்பத்திரி மேட்டில்லிப்ட் கேட்டார். அவசரத்தில்நிறுத்தாமல் வந்துவிட்டேன்எதுவும் சொன்னாரா "
என சம்பந்தமில்லாமல் சுற்றி வளைத்துக் கேட்டேன்
 அந்த கவுன்சிலர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்
"சரி நேற்று விழவைத்து விட்டு வந்தது  நான்தான் என
நானே உளறித்தொலைத்துவிட்டேனோ " எனத் தோன்றியது

அவர் மெதுவாகப் பேசத் துவங்கினார்" யார் அந்த பெருசா ?" என்றார்

"ஆமாம் " என்றேன்

" நேற்றா " என்றார்

" ஆமாம் " என்றேன்

அவர்மிக நிதானமாக

"அவர் செத்துப் போய் ஆறு மாதங்களுக்கு
மேலாகிவிட்டது "என்றார்

1 comment:

  1. ஒவ்வொரு போஸ்ட்டும் படிக்க படிக்க ஆர்வமாக இருந்தது, அவர்களின் அனுபவத்தை படிக்கிறது எனக்கு அலாதி பிரியம்.கதை சொல்லல் உங்களின் கலை என எண்ணுகிறேன்.

    ReplyDelete