Tuesday, November 10, 2015

அடங்காத மனசு

நான்எங்கள்வீட்டுநடுக்கூடத்திலஉட்கார்ந்துப்படித்துக்கொண்டிருக்கிறேன்.
எப்போதுமே நாங்கள்வீட்டில்  உட்காரும்போது இப்படித்தான்
தெற்குப் புற சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொள்வோம்

இப்படி உட்கார்ந்தால் இடது புறம் கூடம் ,நடை,திண்ணை தாண்டி தெருவாசல் வரைதெளிவாகத்தெரியும்அதேபோல வலது புறம் கூடம்,இருட்டுக் கூடம்சமையலறைவெளி சமயலறை,முற்றம்,
மாட்டுக் கொட்டகை,கிணறுதோட்டம் தாண்டிபின் தெரு வரை
அழகாகத் தெரியும்

நாங்கள்எப்போதுமேவாசல்கதவுகளைமூடுவதில்லைசாயந்திரத்திலிலிருந்து வாயில் புறம் வந்த லெட்சுமிகொல்லைப் புறம்போய் விடுவாள் என
பின்புற வாசல் மட்டும் பூட்டி விடுவோம்மற்றபடி எப்போதும் இருபுற கதவுகளும்திறந்தே இருக்கும்

இப்படி படித்துக் கொண்டிருந்தாலும்வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் இங்குஉட்கார்ந்து கொண்டால வாசலையும் கொல்லையையும்.கவனித்துக் கொள்வது ரொம்ப வசதி

 குனிந்து படித்துக் கொண்டிருக்கும் போதேதிடுமென வாசல் பக்கம் யாரோ வருவது போலநிழலாட திரும்பிப் பார்க்கிறேன்.எனக்கு "பக்" என்றதுசெத்துப் போன வெங்கு தாத்தா தடியை ஊன்றியபடி படியேறிக் கொண்டிருந்தார்.

எனக்கு கைகால்நடுக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது
என்னசெய்வது எனத்தெரியவில்லை.

ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டுமிக வேகமாக ஓடி வாசல் கதவை மூடப் பார்க்கிறேன்அதற்குள் அவர் வாசல் தாண்டி திண்ணைக்குள்
நுழைந்து விட்டார்.

ஓடி வந்த அவசரத்தில் டிராயர் வேறகழற ஆரம்பித்துவிட்டது.யோசிப்பதற்கு நேரமில்லைசடாரெனப் பாய்ந்து அவர் உள்ளே நுழையாதபடி
மண்டி போட்டு அவர் முட்டியோடு சேர்த்துப்பிடித்துக் கொண்டு "தாத்தா நீங்க செத்துப் போயாச்சுஇனிமே நீங்கள்வீட்டுக்குள் வரக்கூடாது ஆகாது "
என கத்துகிறேன்

அவர் என்னைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லைஎன் பிடிக்குள் அவர் இல்லவே இல்லைஅவர் பாட்டுக்கு நடந்து நடைக்கு வந்து விட்டார்

ஏற்கெனவே எனக்கு நடைரூம்  என்றாலே பயம்அதில் அப்பா தங்கை  பெரிய பாட்டி ஆகியோரின்உடல்களை படுக்க வைத்துப் பார்த்ததிலிருந்து
பகலில் நடைப்பக்கம் வந்தால் கூடகண்ணை மூடிக் கொண்டுதான் வாசல் பக்கம் வருவேன்இப்போது இவர் வேறு அங்கு நிற்க உடல் நடுங்கத் துவங்கியது

வெங்கு தாத்தா இப்போதுதான் என்னைப் பார்ப்பது போல
"நான் இங்கிருந்துதான்  சுடுகாடு போக ஆசைப் பட்டேன்என் நேரம் நடக்காமப் போச்சு " என்று சொல்லியபடிமேற்கொண்டு வீட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார்

நானும் விடாது " உள்ளே போகாதீர்கள் வெங்குத் தாத்தாவீட்டிற்கு ஆகாது தாத்தா வந்தவுடன் வாங்க தாத்தா "என கத்திக் கொண்டே பின்னால் போனேன்

அவர் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லைஒவ்வொரு இடமாக நின்று  ஏதோ சிற்பத்தைரசிப்பதைப் போலரசிப்பதும் பின் தொடர்ந்து
நடப்பதுமாக வந்து சமயலறையில்கொஞ்ச நேரம் நின்றார்.பின் என்னை பார்த்து"சமையலறையில்மட்டும் கொஞ்சம் வேலை
பார்த்திருக்கிறானாக்கும் " என்றார்

எனக்கு இப்போது எரிச்சல் அளவு கடந்து போயிற்று"எங்கள் வீடு நாங்கள் என்னவும் செய்வோம்உங்களுக்கென்ன ஆச்சு " என்றேன்

அவர் நிதானமாக"உங்க வீடா உங்க தாத்தனைக்கேட்டுப் பாருஒவ்வொரு செங்கலா நான் அடுக்கிரசித்து கட்டிய வீடாக்கும் "என்றார்

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.பயம் ஒருபக்கம்வீட்டில் யாரும் இப்போது பார்த்துஇல்லையே என்கிற எரிச்சல் ஒருபக்கம்
எப்படியும் இவரை வெளியே துரத்திவிடவேண்டும்என்கிற வெறி ஒருபக்கம்
இனி வேறு வழியில்லை .கொல்லைப்புறவாசலைத் தாண்டியதும்கதவைச் சட்டெனப்பூட்டிவிடுவோம் என மெதுவாக
அவர் பின்னாலேயே நடக்கத் துவங்கினேன்

நான் எதிர்பார்த்தபடியே பின் புற வாசல்நிலையில் நின்று பின்புறத்தை ஒரு நோட்டம் விட்டார்.நான் கதவடைக்கரெடியாக இருந்தேன்.
என்ன நினைத்தாரோ சட்டென திரும்பவும்உள்ளே திரும்பி நடக்கத் துவங்கிவிட்டார்

இனி இவரை உள்ளே விட்டால் போச்சு என சட்டெனதரையில் விழுந்து அவர் கணுக்காலை கெட்டியாகப்பிடித்துக் கொண்டு எவ்வளவு சப்தமாகக் கத்த முடியுமோஅவ்வளவு சப்தமாக கண்ணை மூடிக்கொண்டுகத்தத் துவங்கினேன்.இப்போதுஅவர் கால்கள் இரண்டும்என் கைப்பிடியில் இருந்தது.அவரால் நகரமுடியவில்லை

நான் மெதுவாக கண்விழித்துப் பார்த்தபோதுஎன் அம்மாவின்கைகளை கெட்டியாகப் பிடித்தபடிஅவர்கள் மடியில்குப்புறப் படுத்திருந்தேன்.
புரண்டு திரும்பிப் பார்க்கையில்தாத்தாவும் பாட்டியும் குனிந்து என்னையே
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கூடத்தில் சுவற்றில்தெரிந்த அவர்கள் நிழல்கள் இன்னும் என் பயத்தை
அதிகமாக்கிக் கொண்டிருந்தது நிச்சயமாகஅது கனவில்லைவெங்குதாத்தா
உள்ளே தான் இருக்கிறார் எனக் கத்தவேண்டும்போல இருந்தது கத்தவும் செய்தேன்.சப்தம்தான் வெளியே வரவில்லை

"உன் பேரன் என்னவோ பேய் கனவு கண்டு பயந்திருக்கிறான்
சாமி கூண்டில் இருந்து விபூதி எடுத்து நெற்றியில் வை
அப்படியே வாயிலும் போட்டு தண்ணீர் கொஞ்சம்
குடிக்கக் கொடு "எனச் சொல்லி தாத்தா அவர் கட்டிலுக்கு
படுக்கப் போய்விட்டார்

"நிலைக்கு நேராக படுக்காதே எனச் சொன்னால்கேட்டால்தானே " எனச் சொல்லியபடி  என் நெற்றியில்திரு நீறு பூசி அப்படியே கொஞ்சம் வாயிலும் போட்டுகொஞ்சம் தண்ணீரை குடிக்கவைத்தாள் பாட்டி
நான் மெதுவாக எழுந்து உட்கார்ந்தேன்

"என்னடா கனவு கத்தி ஊரையே கூட்டுகிற மாதிரி "
நெஞ்சைத் தடவி விட்டபடிக் கேட்டாள் அம்மா

"நிஜம்மா ம்மா செத்துப் போன வெங்குத்தாத்தா
வீட்டுக்கு வந்தார் .இப்போ கூட உள்ளே இருக்கார்
நம்பும்மா " என்றேன்

"சரி சரி விடிஞ்சு போச்சு நீ  போய் தாத்தாகிட்டபடுத்துக்கோ.நான் உள்ளே இருக்கிறாரான்னு பாக்கிறேன் "எனச் சொல்லி அம்மா எழுந்து வாசல் தெளிக்கப் போனாள்நான் ஓடிப் போய் தாத்தாவை
கட்டிப் பிடித்துப் படுத்துக் கொண்டேன்

"என்ன வெக்குத் தாத்தா ரொம்ப பய முறுத்திவிட்டானா  "என என்னைத் தடவிக் கொடுத்தபடியே தாத்தா கேட்டார்
எனக்கு அது கொஞ்சம் தெம்பாகவும் இருந்ததுகொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது

"இல்லை தாத்தா செத்தவர் உள்ளே வரக்கூடாதுன்னு
கத்திக் கத்தி சொல்றேன் கேக்காம உள்ளே வர்ராரு
கேட்டா என் வீடு உன் தாத்தன் கிட்ட வேற கேளுன்னு
சொல்றாரு.அவர் வீடா தாத்தா உன் வீடுதானே தாத்தா "
என்கிறேன்

"அப்பிடிச்சொன்னானா " எனச் சொன்னவர் சிறிது நேரம்எதையோ நினைத்தபடி பேசாமல் இருந்தார்
பின் அவரே அவருக்கே சொல்லிக் கொள்ளுகிற மாதிரி
பேசத் துவங்கினார்

"அவன் சொல்வது நிஜம்தான் அவன்தான்இந்த வீட்டை கட்டினான்.ஆசை ஆசையாபாத்துப் பாத்துக் கட்டினான்.அதிகக் கடன் ஏறிப்போச்சு
பொண் பிள்ளைங்க ..கல்யாணம் காச்சின்னு செலவு கூடிப் போச்சு..
.சமாளிக்க முடியாம
எங்கிட்டதான் வித்தான்.

உங்க அம்மா சின்னப் புள்ளையா
இருக்கிறப்பவே இதுவெல்லாம் நடந்து போச்சு
தெருவில் வெங்கையாத் தாத்தா அவ்வளவு வசதியா
வாழ்ந்தவருன்னு இப்ப இருக்கிற யாருக்குமே தெரியாது

போன வருஷம் சாகிறதுக்கு முன்னாடி கூடவீட்டை ஒருதடவை நல்லா  பாத்துக்கறேண்டான்னுசொல்லி பாத்துட்டுப் போனான்.
ரொம்ப மனசு சரியில்லைன்னு போன இப்படி இங்கே தான்
கூடத்திலை வந்து உட்கார்ந்துப்பான்

எனக்கு கூட அவங்கிட்ட வாங்கி இருக்கக் கூடாதோன்னு
அப்பப் அப்பத் தோனும்....."

தாத்தா பேசிக் கொண்டே இருந்தார்
நான் எப்ப தூங்கினேன் என்று எனக்கேத் தெரியவில்லை
நான் விழித்துப் பார்த்தபோது நன்றாக விடிந்திருந்தது
அவசரம் அவசரமாக குளித்து முடித்து
வழக்கம்போல ஈஸ்வரன் கோவிலுக்கு சாமி கும்பிடக்
கிளம்பினேன்

அம்மா சமையல் கட்டிலிருந்து
" நீ சின்னப் பையன் இல்லை ஆறு முடிச்சு
ஏழு போகப் போறே.படிப்போட தைரியத்தையும் கொடுன்னு
அம்பாள வேண்டிண்டு வா "ன்னு கத்தினாள்

நான் மண்டைய ஆட்டிவிட்டு தெருவுக்கு வந்தேன்
வாசலுக்கு வந்ததும் என்னையும் அறியாமல் ஏனோ
தெருவுக்கு நடுவில் இருந்த வெங்குத்தாத்தா பையன்
வீட்டைத்தான் பார்த்தேன்

வாசலில் ரிக்க்ஷாவில் இருந்து நாராயணன் சாஸ்திரிகளும்
அவர் அசிஸ்டெண்டும் இறங்கி அவர்கள் வீட்டுக்குள்
போய்க் கொண்டிருந்தார்கள்.என்னவாக இருக்கும்
என யோசித்தபடி நடக்கத் துவங்கினேன்

வெங்குத்தாத்த விட்டுக்கு எதிர்வீடுதான்  கோபால் வீடு
அவனும் வாசலில் இருந்து ரிக்க்ஷாவில் இருந்து
பை ,சட்டி பானைகளை இறக்குவதை வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருந்தான்

நான் அவன் அருகில் போய் " இவர்கள் வீட்டில்
என்ன விஷேசம்  "என்றேன்

"உனக்குத் தெரியாதா வெங்குத்தாத்தா செத்து இன்றோடு
ஒரு வருஷம் ஆகிப் போச்சு.இன்று தலை திவசம் " என்றான்

No comments:

Post a Comment