அப்போது நாங்கள் ஒரு வாய்க்காலைஒட்டிய வீட்டில் குடியிருந்தோம்
வாய்க்காலை ஒட்டிய வீட்டில் இருந்தால்என்ன என்ன பிரச்சனைகள் இருக்குமோஅத்தனை பிரச்சனைகளும் எங்களுக்கு இருந்தது
மழைக் காலங்களில் அதிகமானக் கொசுக்கடிவிதம் விதமான பூச்சிகளின் நடமாட்டம் மற்றும் நீரில் மூழ்கிய மேடு பள்ளச் சாலைகள்
சுகாதாரக் கேடு விளைவிக்கும் சாக்கடைகலந்த குடி நீர்இவையெல்லாம் கூட எங்களுக்கு ஒருமாதிரிபழகிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிற வேளையில்
ஒரு நாள்....
நாங்கள் வளர்த்து வந்த அல்சேஷன் நாய் ஒருவித்தியாசமான குரலில் குரைக்க ஆரம்பித்ததுநாங்கள் அவசரமாய் ஓடிப் போய்ப் பார்க்க
இருட்டில் ஒன்றும் புரியவில்லை. சரி ஒன்றுமில்லைஏதாவது புதியதாக வேறு பகுதி நாய் வந்திருக்கும்அதனால்தான் இப்படி வித்தியாசமாகக்
குரைக்கிறது என எங்களை நாங்களேசமாதானம் செய்து கொண்டு படுத்துவிட்டோம்
மறு நாள்
பகல் பொழுதில் நாய் மீண்டும்அதே மாதிரிக் குரைக்க அவசரம் அவசரமாய்
வாசல் கதவைத் திறந்து பார்க்க அதிர்ந்து போனோம்.ஒரு ஆறடிக்குக் குறையாத கன்னங்கரேலெனஒரு பெரிய பாம்பு வீட்டு மதிலோரம்
அலட்சியமாக ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது
அதனுடைய உடல் மினுமினுப்பு பருமன் நிறம்எங்களுக்குள் ஒரு கிலியை ஏற்படுத்திப் போகஎன்ன செய்வது என அறியாமல்
திகைத்துப் போய் நின்றோம்
அது எங்களை யாரையும் ஒரு பொருட்டாகக்கருதாதுஅதன் போக்கில் மெதுவாகக்காம்பௌண்டைக் கடந்து வீட்டை அடுத்திருந்த
புதருக்குள் மறைந்து போனது
அடுத்து உடனடி நடவடிக்கையாககாம்பௌண்டுச்சுவருக்கு அருகில் இருந்த
செடி கொடிகளையெல்லாம்சுத்தம் செய்து அடுத்த வீட்டுக் காரர் சொன்ன
ஐடியாவின்படி மஞ்சள் கரைத்துத் தெளித்துஅருகில் இருந்தகோவிலுக்குப் போய்நாக கன்னிகளுகளுக்கு பால் அபிஷேகம்செய்து இனி பாம்புப் பிரச்சனை இருக்காது எனநாங்கள் எங்களை தைரியப் படுத்துக் கொள்ள
முயற்சித்துக் கொண்டிருந்தோம்
ஆனால் எங்களுடைய இத்தனை பிரயத்தனங்களும்அந்தப் பாம்பிடம் எந்தவித பாதிப்பினையும்ஏற்படுத்தவில்லை
மாறாக ஒரு நாளைக்கு ஒருமுறை போய்வந்ததுஇரண்டுமுறை
போய் வர ஆரம்பித்தது.
எங்கள் வீட்டு நாய் கூட முதலில்பயந்து ஒரு மாதிரியான குரலில் குரைத்தது
இப்போது ஒரு சிறு தகவல் தெரிவிப்பது போலவித்தியாசமான குரலில்குரைக்க மட்டும் செய்தது
அதன் குரலில் பழைய பதட்டமோ பயமோ இல்லை
நாங்கள் கூட இரயில் தண்டவாளத்தின்அருகில் வசிப்பவர்கள் ரயில் சப்தத்தை வைத்துஇத்தனை மணிக்கு இந்த ரயில் போகும் என
அந்த சப்தத்தோடு தங்களைச் சம்பத்தப்படுத்திக்கொள்வதைப் போல நாங்களும் நாயின்குரலை வைத்து பாம்பு கிராஸ் செய்து
கொண்டு உள்ளது எனத் தெரிந்து கொண்டுபயமோ பதட்டமோ இல்லாமல்
எங்களுடைய வேலைகளை நாங்கள் கவனிக்கப பழகிவிட்டோம்
இந்த்ச் சூழலில் ஒரு நாள் மாலை மிக லேசாகஇருள்பரவத் துவங்கிய சமயத்தில்வாசல் பக்கம் போனஎனது பெண் திடுமேனகத்தியபடி ஓடி வந்து என் மடியில்முகம் புதைத்துசப்தமாக பயந்து அலற ஆரம்பித்தாள்
உட்ல் தெப்பமாய் வேர்த்துக் கொட்டஉடல் நடுங்கிக் கொண்டிருந்தது
நானும் பயந்து போய் அவளை கீழேபடுக்கவைத்துவிட்டுவாசல் பக்கம் வந்து பார்க்க வாசல் கேட் கதவின் மேல்முழுவுடலையும்கிடத்திப படமெடு த்தபடி
அந்தக் கரு நாகம்
சாவகாசமாக காற்று வாங்கிக் கொண்டிருந்தது
(தொடரும் )

ஐய்ய்யோ! அப்புறம் என்னாச்சு? பாம்புன்னாலே படையும் நடுங்குமாம். எனக்கும் பாம்புன்னாலே பயங்கர அலர்ஜிப்பா.. படத்தில் கூட பார்க்க மாட்டேன்.
ReplyDelete